Local

கோர விபத்து ஒரு வயது குழந்தைப் பலி!

புத்தளம் – கொழும்பு முகத்திடலுக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையின் தாய், தந்தை இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இச்சம்பவம் இன்று 2020.09.17 பிற்பகல் சுமார் 1. 30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்

மோட்டார் சைக்கில் மீது கார் ஒன்று மோதியதில் கனமூளை, மிஹ்ராஜ்புரத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் 1 வயது குழந்தையும் விபத்துக்குள்ளாகினர்.

இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கார் ஓட்டுனர் விபத்தை ஏற்படுத்தி விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று தலைமறைவாகியுள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய், தந்தை இருவருக்கும் கால்கள் உடைந்துள்ள நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading