Local

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

1,450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியை இன்று முதல் 1,250 ரூபாவிற்கு சுப்பர் மார்கட்களில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து நேற்று விவசாய அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் அஜித் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் பண்டிகை காலம் தொடங்கும் போது, ​​உள்ளூர் முட்டையின் விலை 30 ரூபாய்க்கு நுகர்வோர்கள் பெறலாம் என்றும் கலந்துரையாடலின் பின்னர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading