World

கோழி குழம்பு சரியாக சமைக்காததால் மனைவி கொடூர கொலை!

கர்நாடக மாநிலத்தில் கோழி குழம்பை சரியாக சமைக்காத மனைவியை கொடூரமாக கொலை செய்து கணவன் ஏரியில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது மனைவி ஷெரின் பானு. இருவருக்குள் அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பலமுறை வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி ஷெரின் பானுவை காணவில்லை என்பதால் அவர்களது சொந்தக்காரர்கள் பல இடத்தில் தேடியுள்ளனர். அதே சமயம் பானுவின் கணவரும் வீட்டில் இல்லாததால் அவர் மேல் சந்தேகப்பட்ட உறவினர்கள் காவல் நிலையத்தில் முபாரக் என்பவரின் பெயரில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து காவல் அதிகாரிகள் தலைமறைவாக இருந்த முபாரக்கை கண்டுபிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியது, சம்பவ தினத்தன்று பானு வைத்த கறி குழம்பு பிடிக்காததால் இருவருக்குள் பிரச்னை வெடித்தது.

இதனால் ஏற்பட்ட கோவத்தால் தனது மனைவியை கொலை செய்து ஏரியில் வீசி எறிந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து ஏரியில் கிடைத்த சடலத்தை பொலிஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முபாரக்கை பொலிஸ் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading