East

சாதனையால் மிளிர்ந்த சம்மாந்துறை தேசிய பாடசாலை!

இம் முறை உயர் தரப் பரீட்சையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து வைத்திய துறைக்கு 09 மாணவர்களும், பொறியியல் துறைக்கு 04 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பௌதீகவியல் முறைமை தொழில் நுட்பப் பிரிவில் 04 மாணவர்களும், பொறியியல் தொழில் நுட்பப் பிரிவில் 06 மாணவர்களும் பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளதாக பாடசாலையின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையினூடாக அறியமுடிகின்றது.

இந்த முன்னேற்றத்தில் மட்டில்லாத மகிழ்வுடன் பாடசாலையைப் பெருமிதம் கொள்ளும் வகையில் பாடசாலையின் அதிபர் ஏ.சி.ஏ.எம். இஸ்மாயில் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில்,

குறித்த மாணவர்களுக்கும், அவர்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த ஆசியர்கள், பகுதித் தலைவர்கள் உட்பட வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading