Local

சிரிமாவின் காலத்தைப் போல நாட்டின் நிலை ஏற்படலாம் கீதா தெரிவிப்பு!

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தைப் போல நாட்டின் நிலை ஏற்படலாம்  என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமார சிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநருக்கு மட்டுமல்ல தனக்கும் மிகுந்த மன வேதனையும் விரக்தியும் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

பெந்தர-எல்பிட்டிய மக்களுக்கு சரியான சலுகை வழங்கவில்லை என்றும் சலுகை வழங்காமல் தான் அரசியலுக்கு வந்தது எதற்காக என தான் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெந்தர-எல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிலிருந்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளாடைகளை நீக்குமாறு தெரிவித்த கருத்து தனக்குப் பிடிக்கவில்லை என்றும், பொருட்களுக்கு வரி விதிப்பதன் மூலம், அப்பிள், திராட்சை போன்ற பண்டங்கள் எதிர்காலத்தில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தைப் போல நாட்டில் காணப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading