CinemaGossip

சிறுவயதில் வன்கொடுமைக்கு ஆளானேன் பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்!

பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் தான் சிறு வயதிலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஹிந்தி திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத், கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தற்போது லாக் அப் எனும் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை கங்கனா நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் பல சர்ச்சைகளை சந்தித்து வந்தது.

விரைவிலேயே இந்த நிகழ்ச்சி முடிவடைய உள்ள நிலையில், சமீபத்திய எபிசோட் ஒன்றில் போட்டியாளர்களுடன் கங்கனா பேசினார். அப்போது தனது சொந்த ஊரான இமாச்சல பிரதேசத்தில் சிறு வயதாக இருக்கும் போது வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறி பகீர் கிளப்பினார்.

அவர் பேசும்போது, ‘எனது ஊரில் நான் சிறு வயதாக இருக்கும் போது, என்னை விட சில வயது மூத்த சிறுவன் ஒருவன் என்னை தகாத முறையில் தொடுவதை வழக்கமாக வைத்திருந்தான். ஆனால் அப்போது அதற்கு அர்த்தம் எனக்கு புரியவில்லை. ஒவ்வொரு குழந்தையும் தங்கள் குடும்பம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் அதை கடந்து வெளியில் சென்று தான் ஆக வேண்டும். Good Touch, Bad Touch என்னவென்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதுபற்றி பொது வெளியில் யாரும் பேசுவது கிடையாது. குழந்தை பருவத்தில் எல்லோரும் இதை அனுபவித்திருக்கிறார்கள். இதை நான் உட்பட பலரும் அனுபவித்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading