Local

கேஸ் சிலிண்டர் 10 ஆயிரம் ரூபா பாண் ஒன்றின் விலை 400 ரூபா வரை உயரும்?

கேஸ் சிலிண்டர் 10 ஆயிரம் ரூபாவிற்கு செல்லும் எனவும் , பாண் ஒன்றின் விலை 400 ரூபாவாக உயரும் எனவும் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டதாக பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் கூறினார்.

நேற்று நண்பகல் அலரி மாளிகையில் பிரதமரை சந்திக்க சென்ற தாம் நாமல் ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடிய போது நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக நாமல் ராஜபக்‌ஷ கூறியதாக பாஹியங்கல ஆனந்தசாகர தேரர் கூறினார்.

தற்போதய நெருக்கடி நிலமையை கருத்தில் கொண்டு பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் மஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக தாம் அவர்களின் செய்தியை மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எத்தி வைத்ததாக பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading