World

சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 152 பாதிரியார்கள் நீக்கம்

சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 152 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மெக்சிகோவில் கடந்த 9 வருடங்களில் சிறுவர்களுக்கு  எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட  152 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மெக்சிகோவின் மோன்டரேயின் பேராயர் ரோஜிலியோ கப்ரேரா கூறும்போது,
”கடந்த ஒன்பது வருடங்களில் மட்டும் 152 கத்தோலிக்க பாதிரியார்கள் சிறுவர்களுக்கு   எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக தேவாலயத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் சிறை தண்டனை பெற்றுள்ளனர்” என்றார் .
பிரேசிலுக்கு அடுத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக இருப்பது மெக்சிகோவில்தான்.
முன்னதாக,  சில பாதிரியார்களும் பிஷப்புகளும் பாலியல் பலாத்கார செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
2018-ல் கேரள கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டியதை அடுத்து இந்த பிரச்சினை பெரிதானது.
இதனைத் தொடர்ந்து தேவாலயங்களில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடும் பாதிரியார்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உலக அளவில் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading