Local

நீரோடையில் விழுந்து மாணவன் உயிரிழப்பு!

உடபுஸ்ஸவ்வலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருபஹ பகுதியில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

உடபுஸ்ஸவ்வலாவ, ருபஹ பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பசிந்து மதுரங்க எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் நீரோடை ஒன்றில் விழுந்திருந்த நிலையில் தந்தையினால் மீட்கப்பட்டு கரைக்கு எடுத்தவரப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த மாணவன் ருபஹ வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் உடபுஸ்ஸவ்வலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading