சில சர்வாதிகள் உலகை சீரழிக்கிறார்கள்! போப் ஆண்டகை!!
உலகம் இன்று “ஒரு சில சர்வாதிகாரிகளால் சீரழிக்கப்பட்டு வருகிறது” என்று திருத்தந்தை லியோ கடுமையாக விமர்சித்துள்ளார். கேமரூன் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்குள்ள பாமெண்டா நகரில் ஆற்றிய உரையில், போருக்காக கோடிக்கணக்கான டாலர்களைச் செலவிடும் தலைவர்களைச் சாடினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திருத்தந்தையை “மிகவும் தாராளவாதி” என்றும், அவர் தனது பணியைச் சரியாகச் செய்யவில்லை என்றும் சமூக வலைதளங்களில் விமர்சித்ததைத் தொடர்ந்து, திருத்தந்தையின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
மதத்தையும் கடவுளின் பெயரையும் ராணுவ மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துபவர்களுக்குத் தனது உரையில் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.