World

ஈரான் தாக்குதலில் அதி விலையுயர்ந்த பல விமானங்களை இழந்த அமெரிக்கா

 

ஈரானுக்கு எதிரான போரில் மிகவும் அதி விலையுயர்ந்த ஆளில்லா விமானமான ட்ரோனை இழந்ததாக அமெரிக்க கடற்படைத் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

போர் தொடங்கி கிட்டத்தட்ட 40 நாள்களுக்குப் பின்னர், சுமார் இரண்டு வாரங்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரவும், அமெரிக்க தாக்குதலில் ஏற்பட்டுள்ள கட்டட இடிபாடுகளுக்கு இழப்பீடு வழங்கவும் ஈரான் முனைப்புக் காட்டி வருகின்றது.

ஈரான் அணுசக்தித் திட்டங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் என அமெரிக்கா முறையிட்டு வருகின்றது. அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதிப்பேச்சு மீண்டும் இரண்டு நாள்கள் கழித்து தொடங்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (15) தெரிவித்திருந்தார்.

சுமார் 40 நாள்கள் நடைபெற்ற போரில், அமெரிக்கா இதுவரை 40-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மதிப்பு 720 அமெரிக்க டொலர்கள் என்றும் இந்திய மதிப்பில், ரூ. 7,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

தொடக்கம் முதலே அமெரிக்க விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மீது தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்திருந்தற்கு மறுப்புத் தெரிவித்திருந்த அமெரிக்கா, தற்போது சுமார் 24 எம்கியூ4சி (MQ-4C) ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் சுமார் ரூ. 2,300 கோடி மதிப்பிலான ட்ரோனை இழந்ததாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை அருகே கடந்த 9 ஆம் திகதி அமெரிக்க இராணுவத்துக்கு எதிராக ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதலில் அமெரிக்காவின் கண்காணிப்பு ட்ரோன்களில் மிக முக்கியமான எம்கியூ4சி டிரைட்டன், செயலிழந்து பாரசீக வளைகுடாவில் விழுந்து காணாமல்போனதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த ட்ரோனின் மதிப்பு சுமார் 200 முதல் 240 மில்லியன் டொலர்கள் வரை இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,300 கோடி. இந்த ட்ரோனானது மிகத் தீவிரத் தாக்குதல் நடத்தும் 100 மில்லியன் டொலர்கள் கொண்ட எஃப்-35 போர் விமானத்தைவிட இரு மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகின்றது.

எம் 4கியூ டிரைட்டன் ட்ரோனானது சுமார் 50,000 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த ஈரானுக்கு எதிரான போரில் இந்த ட்ரோன் மட்டுமின்றி, இ-3 செண்ட்ரி ஏடபிள்யூசிஎஸ், ஏ10 தண்டர்போல்ட் 2 வார்த்ஹாக், சி-130 ஹெர்குலஸ், எஃப்15இ ஆகிய விமானங்களையும் அமெரிக்கா இழந்திருக்கின்றது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading