சீட்டு கட்டுகளை வீடாக மாற்றிய கலைஞர்: 8 மணிநேரத்தில் கின்னஸ் சாதனை
அமெரிக்க கட்டிடக் கலைஞரான ப்ரையன் பெர்க், 8 மணிநேரத்தில் 54 நிலைகளில் சீட்டு கட்டுகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வீடு போல் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
எந்தவொரு பசையோ உலோகமோ இல்லாமல் இப் படைப்பை உருவாக்கியுள்ளார்.
இதற்காக அறையில் ஏழு ஈரப்பதமூட்டிகளை பெர்க் அமைத்திருந்தார்.
இச் சாதனையின்போது தண்ணீர் மற்றும் உணவுக்காக மாத்திரம் சிறிது நேரம் இடைவெளி விடப்பட்டது.
பெர்க்கின் நிலையான சீட்டு கட்டு வரிசை, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஐந்து முதல் ஆறு நிலைகளை அடுக்க அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது.




You must be logged in to post a comment.