Local

இளம் வயதிலேயே தொழில்முனைவோர் பயணத்தைத் தொடங்கினால், பெரிய சாதனைகளையும் வெற்றிகளையும் பெற முடியும்- வைத்தியர் தயான்ரா ஜபக்ஷ 

சகிலா இஃபாம்)
இலங்கையில், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீதான வேலைவாய்ப்பு விகிதம் 7.5 சத வீதத்தினை  கடந்துள்ளது, எனினும் இது அதிர்ச்சியூட்டும் தகவலாகவே பார்க்கப்படுவதோடு எங்கள் இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்திற்கான  தயாரிப்பு முறையில் உடனடி மாற்றத்தின் அவசர தேவையை வலியுறுத்துகிறது. தற்போதைய கல்வி முறை, நல்ல நோக்கத்துடன் இருந்தாலும், ஆண்டுதோறும் சுமார் 600,000 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு முயற்சி செய்கிறார்கள். ஆயினும் இந்த மாணவர்களில் 60 சதவீதமானவர்கள் மட்டுமே உயர்தர பரீட்சைக்கு முன்னேறுகிறார்கள், அவர்களில் 175,000 பேர் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். மிகவும் குறைவான அளவில் சுமார் 25 சதவீதமானவர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்திற்கு முன்னேறுகிறார்கள். மேற்படி இந்த புள்ளிவிவரங்கள் தீர்க்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான இடைவெளியை எடுத்துக்காட்டுகின்றன.  இதனால் ஒவ்வொரு மாணவரும் பாரம்பரிய சராசரி கல்விப் பாதையை ஒழுங்காகப் பின்பற்ற முடியாதுள்ளது.  இந்நிலைமையில்   தொழில்முனைவோருக்கு முக்கியத்துவம் கொடுப்பது முக்கியமானதாகிறது.
தொழில்முனைவோர் பற்றிய அடிப்படை அறிவு, தொழில்முனைவோர் ஒழுக்கத்தை கட்டியெழுப்புதல், வளர்ச்சி மனப்பான்மை, வரம்புகளுக்கு அப்பாற்பட்ட சிந்தனை மற்றும் மேம்பட்ட அனுபவங்களை பெறுதல் தொடர்பில்  இளைஞர்கள் யுவதிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆய்வு மற்றும் வெற்றி கதைகள், கலந்துரையாடல்கள், நேர்காணல்களை  முன்வைக்க வேணடும.;
இவ்வாறு இலங்கையில் மிக பிரசித்தி பெற்ற  நுளுழுகுவு  தகவல் தொழினுட்ப கல்வி நிறுவனத்தின் வளர்ச்சி அதன் உருவாக்க தொடர்பில் சுவாரசியமான எழுச்சியூட்டும் கதையினை வைத்தியரும் தொhழில் அதிபருமான  தயான் ராஜபக்ஷவுனுடைய நேர்காணல் மூலம் வெளிகொணர முடிந்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப தொழில்முனைவோரும் தொழிலதிபரும்  வைத்தியருமான தயான் ராஜபக்ஷவின் ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை உருவாக்க ஆரம்பகால வணிகப் போராட்டங்களோடு ஒரு கடுமையான கரடு முரடான பாதையில் குறிப்பிடத்தக்க குறிக்கோள்களுடள் பயணித்து அவரது தொலைநோக்குப் பின்னால பயணம்; உள்ள கதையை நாங்கள் பார்ப்போம்… தனது மருத்துவ கல்வி பயணத்தோடு தகவல் தொழில்நுட்ப தொழில்முயற்வியினையும் கைவிடவில்லை.
தயான் ராஜபக்ஷ, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பைத் தொடங்குவதற்கு முன்பே, தகவல் தொழில்நுட்பத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த பேரார்வம் வெளிப்பட்டது. இந்த பாடத்தின் மீதான அவரது ஆர்வமானது அவரது கல்வித் தேடல்களுக்கு வழிகாட்டியது மட்டுமின்றி, வெறும் 1 மில்லியன் ரூபாயின் ஆரம்ப முதலீட்டில் நுளுழுகுவு தகவல் தொழினுட்ப கல்வி நிறுவனத்தை நிறுவவும் அவரைத் தூண்டியது- டாக்டர் தயான் உட்பட ஐந்து முதலீட்டாளர்களிடையே சமமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு மாற்றும் முயற்சிதான் இது.
நிறுவனம் அதன் ஆரம்ப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க தடைகளை எதிர்கொண்டது, இது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிருப்திக்கு வழிவகுத்தது. நண்பர்களின் ஆதரவு கைவிட்பட்டது. தோல்வி மற்றும் அவரது நண்பர்களின் ஆதரவை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை எதிர்கொண்ட டாக்டர். தயான் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை எடுக்க வேண்டியதாயிற்று.   அவர் கடுமையான நிதிக் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டார். எந்த வங்கிகளும் கடன்களை வழங்கத் தயாராக இல்லாததால், டாக்டர். தயான் குறைந்த மூலதனம் மற்றும் குறைந்த அபாயத்துடன் புதிய முயற்சிகளைத் தொடங்க வேண்டியிருந்தது. பல பின்னடைவுகள் இருந்தபோதிலும், ஒரு சில வெற்றிகரமான முயற்சிகள் வெளிப்பட்டன,
வளர்ச்சியடைந்த ஆண்டுகளில், சந்தைப்படுத்தல் மற்றும் தயாரிப்பு மேம்பாடு முதல் தனது குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது வரை வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் டாக்டர் தயான் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். நுளுழுகுவு  தகவல் தொழில்நுட்ப தனியார் கல்வி நிறவனம் அதன் 25வது ஆண்டு நிறைவை நெருங்கும் போது, ​​ஆரம்பகால குழு உறுப்பினர்களில் சிலர் இன்னும் முக்கிய தூண்களாகச் செயல்படுவதால், அவரது நடைமுறை அணுகுமுறை முக்கியமானதாக காணப்படுகின்றது.
‘வாழ்க்கையை வடிவமைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்’ முயற்சியின் மூலம் இலங்கை முழுவதும் குறைந்த செலவிலான கல்விக்கான உறுதியான அர்ப்பணிப்புடன் இணைந்த மூலோபாய பங்காளித்துவங்கள் மற்றும் பிராந்திய விரிவாக்கத்துடன் நிறுவனத்தின் பாதை வியக்கதக்க முறையில் மாறியுள்ளது.
 ‘எந்தவொரு பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் தொழில்முனைவோர் மிக முக்கியமானவர்கள், குறிப்பாக நம்மைப் போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாட்டிற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தி 85 பில்லியன் அமெரிக்க டாலர்கள் காணப்படுகின்ற நிலையில் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் மட்டுமே, இந்த நிலைமையில் தொழில்முனைவோர், உலகளாவிய சந்தைகளை கைப்பற்றி, ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க முடியும் என  டாக்டர். தயான் அவரது நேர்காணலில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் இந்த நேர்காணலில கூறுகையில், ‘இளைஞர் தொழில்முனைவோர் இந்த சூழலில் குறிப்பாக முக்கியமானவர்கள், ஏனெனில் அவர்கள் தற்போதைய போக்குகள் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களுடன் மிகவும் இணக்கமாக உள்ளனர். அவர்கள் மீள்தன்மையுடனும், தகவமைத்துக் கொள்ளக்கூடியவர்களாகவும் இருப்பார்கள், தோல்விகளில் இருந்து மீளும், குறைவான தனிப்பட்ட பொறுப்புகள் அவர்களைத் தடுத்து நிறுத்துகின்றன. எனவே, இளம் வயதிலேயே தொழில் முனைவோர் பயணத்தைத் தொடங்கினால், பெரிய சாதனைகளையும் வெற்றிகளையும் பெற முடியும்.
நாம் எதிர்கொள்ளும் சவால்கள் கல்வி மட்டுமல்ல, சமூகமும் கூட. எந்த நாட்டிலும், வளர்ந்த நாடுகளில் கூட அரசாங்கங்கள் கவிழலாம். எனவே, தனிநபர்கள் சுயமாற்றத்தில் கவனம் செலுத்துவது கட்டாயமாகும். தகவமைத்து வளர வேண்டிய பொறுப்பு தன்னிடமிருந்தே தொடங்குகிறது. சமூக காரணிகள் ஒரு பாத்திரத்தை வகிக்கும் அதே வேளையில், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மாற்றத்தக்க திறன்களைப் பெறுதல் ஆகியவை முக்கியம். குறிப்பாக, குழுப்பணி, சுய முகாமைத்துவம் மற்றும் தகவல் தொடர்பு போன்ற திறன்கள் இன்றைய மாறும் உலகில் அவசியம். இலங்கையில் தொழில்முயற்சிகளை மேம்படுத்துவதற்கு அதிக நிதியளிப்பு தேர்வுகள் ஒரு சிறந்த ஊக்கியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஈட்டுக்கடன்கள் தேவையில்லாமல் அதிக திறன் கொண்ட திட்டங்களுக்கு நிதியளிப்பது மிகவும் முக்கியமானது. கூடுதலாக, தொழில்முனைவோர் தோல்விகளில் இருந்து மீண்டு வருவதற்கு அரசாங்கத்தின் ஆதரவு தேவைப்படுகிறது’ என அவர் தனது நேர்காணலில்; கூறினார்.
பட்டதாரிகள் வேலை தேடுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் இருக்க, பல்கலைக்கழகங்களுக்குள் தொழில்முனைவோர் மனப்பான்மையை அவர்களுக்குள்  விதைப்பது இன்றியமையாதது என்று டாக்டர் தயான் நம்புகிறார். இளம் தொழில்முனைவோர் புதிய சந்தைகளைக் கண்டறிய உதவுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த இராஜதந்திர பணிகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் எவ்வாறு திறம்பட பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.
இந்த தேசத்தின் இளைஞர்களுக்கு உண்மையிலேயே அதிகாரம் அளிக்க, கவனம் செலுத்துவதில் ஒரு மாற்றம் தேவை – முழுக்க முழுக்க கல்வி சாதனைகளில் இருந்து தொழில்முனைவு மற்றும் அத்தியாவசிய, மாற்றத்தக்க திறன்களின் தேர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சிக்கு. இந்த மாற்றம் ஒவ்வொரு தனிமனிதனுடனும் தொடங்குகிறது, மேலும் நெகிழ்ச்சியான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது எனவும் தகவல் தொழில்நுட்ப தொழில்முனைவோரும் தொழிலதிபரும்  வைத்தியருமான தயான் ராஜபக்ஷ தனது நேர்காணலில்; சுட்டிக்காட்டினார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading