World

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ஊரடங்கு அமுல்!

முதன்முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பூஜ்ஜிய கோவிட் திட்டத்தின் மூலம் பல கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை ஒழிக்க அந்நாட்டு அரசு போராடி வந்த நிலையில், மீண்டும் வூஹானில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் சுமார் 9 இலட்சம் பேர் வசிக்கும் ஹன்யாங் மாவட்டத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குனாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த ஊரடங்கு தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய கடைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டடோங், குவான்சு நகரங்களிலும் பொது முடக்கங்கள் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading