பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே திரில் வெற்றி!

ரி20 உலகக் கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
131 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அதனடிப்படையில் 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது.
