Local

சீனா சென்ற ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (14) காலை 10:25 மணிக்கு பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவிற்கு நான்கு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், சீனா சென்ற ஜனாதிபதிக்கு, சீன இராணுவத்தால் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் சென் சியாடோங் முறையாக வரவேற்றுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பயணத்தின் போது பாதையின் இருபுறமும் இரு நாடுகளின் தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இது பரஸ்பர மரியாதை மற்றும் இராஜதந்திரத்தை அடையாளப்படுத்துகிறது.

இந்த அரசு முறைப் பயணத்தின் போது, ​​தொழில்நுட்பம், விவசாய மேம்பாட்டில் கவனம் செலுத்தும் களப் பயணங்கள் மற்றும் வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகள் உட்பட பல முக்கிய ஈடுபாடுகளில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

இந்த விஜயத்தில் உயர் மட்ட வணிகக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) இந்த விஜயத்தின் போது கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி திசாநாயக்கவுடன் அமைச்சர்களான விஜித ஹேரத், பிமல் ரத்நாயக்க உள்ளிட்டவர்களும் சீனா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading