சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு அலியான்ஸ் லங்கா உதவி கரம் நீட்டுகிறது
தெற்காசியாவிலுள்ள மிகப்பெரிய சிறுவர் மருத்துவமனையான சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு உதவும் வகையில், அலியான்ஸ் லங்கா நிறுவனத்தின் தலைமைத்துவ மகளிர் ஊழியர் வளக் குழு (Women in Leadership Employee Resource Group – WIL ERG) நன்கொடை முயற்சியொன்றை அண்மையில் முன்னெடுத்துள்ளது.
2026 பெப்ரவரி 3 அன்று நடைபெற்ற இந்த முயற்சியில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்ற சிறுவர்களுக்கு தொடர்ச்சியான மற்றும் தரமான சிகிச்சைப் பராமரிப்பை வழங்க உதவுவதற்காக அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சிறுவர்களுக்கான சுகாதாரப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. சிகிச்சை பெறும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவர்களின் ஆறுதல், கண்ணியம் மற்றும் நலனை உறுதி செய்வதற்கும் இந்த பங்களிப்புகள் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டன.
எங்கள் ஊழியர்களின் கூட்டு முயற்சிகள் மூலமாகவே இந்த முயற்சி சாத்தியமானது. தன்னார்வத் தொண்டுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு சமூகத்திற்கான எங்கள் பங்களிப்பை தொடர்ந்து வலுப்படுத்த உதவி வருகிறது. இது நாங்கள் சேவை செய்யும் சமூகங்களை ஆதரிப்பதற்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கு நம்பிக்கையையும், அக்கறையையும் தரும் அர்த்தமுள்ள செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அலியான்ஸ் லங்கா நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இம்முயற்சி சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.

You must be logged in to post a comment.