Local

சுகாதார தொழில்நுட்ப குழுவிலிருந்து GMOA விலகத் தீர்மானம்!

!சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவில் இருந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இயக்குனர், வைத்தியர் ஹரித அளுத்கே இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில் – “தற்போது நாங்கள் அறிந்த வகையில் சமூகத்திற்குள் அதிகளவு தொற்று பரவியுள்ளது. தொடர்ந்தும் எமக்கு PCR பரிசோதனை தொடர்பில் பாரிய பிரச்சினை உள்ளது.PCR பரிசோதனைகள் மேற்கொள்வதில் உள்ள பற்றாக்குறை முதலாவது பிரச்சினையாக இருக்கின்றது. இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
ஜீ.பி.எஸ் மூலமாக அன்றி நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களை இனங்காண முடியாது போய்விடும்.இதனை நாங்கள் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வருகின்றோம். அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
நேற்றைய தினமும் நாங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து கலந்துரையாடினோம்.
இதனை தொடர்ந்தும் முன்னெடுக்காவிடின் தொழில்நுட்ப முறையை பின்பற்றக்கூடிய நடைமுறையை இவர்கள் எதிர்காலத்தில் தொடர்வார்களா என்பது தெரியவில்லை.எனவே, சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழு செயற்பாடுகளில் பங்கேற்பதை நிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.ஜீ.பி.எஸ்ஸை செயற்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையை இந்த வாரத்திற்குள் முன்வைக்காவிடின் நாங்கள் உறுதியான தீர்மானத்தை எட்ட வேண்டி ஏற்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading