Local

சுசந்திகா ஜயசிங்கவிற்கு கொரோனா!

இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவரால் செய்துகொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் முடிவையடுத்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரது இரண்டு குழந்தைகளும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் மகளிர் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற 47 வயதான சுசந்திகாவுக்கு பின்னர் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

மேலும் ,அவர் இரண்டு உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading