Local

ரஞ்சனின் விடுதலை எவ்வித உண்மையும் இல்லையாம்!

சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற முன்னாள் எம்.பி ரஞ்ஜன் ராமநாயக்க விடுதலையாகப் போகின்றார் என்று பரவிவரும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாதென்று சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி கோட்டாபய இதுவரை அதுபற்றிய முடிவினை தனக்கு இன்னும் அறிவிக்கவோ கலந்துரையாடவோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரஞ்ஜன் ராமநாயக்க இன்று அல்லது விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ டுவிட்டர் தளத்தில் அண்மையில் பதிவொன்றை வெளியிட்டிருந்ததோடு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ரஞ்ஜனுக்காக கோரிக்கை ஒன்றையும் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading