Local

சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிலாபம் முகத்துவாரத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

7 வயது மகள், 6 வயது மகன் மற்றும் 35 வயதுடைய தந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் இவர்களது சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிலாபம் முகத்துவாரத்திற்கு படகில் சென்ற இவர்கள் படகில் இருந்து இறங்கி அங்கு நீராடச் சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading