Local

சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் அட்டை அறிமுகம்!

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சுற்றுலா எரிபொருள் அனுமதி அட்டையை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று Dialog Axiata நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த சுற்றுலா எரிபொருள் அனுமதி அட்டை மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு முறையைத் தவிர்த்து, அவர்களின் தேவைக்கேற்ப எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

சுற்றுலா எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை எந்தவொரு வெளிநாட்டு நாணயத்திலும் கொள்வனவு செய்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த வசதியை நாடளாவிய ரீதியில் உள்ள 300 Ceypetco மற்றும் LIOC பெற்றோல் நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading