Cinema

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக காணொளி வெளியிட்ட மீனா! என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது கலை பயணத்தின் 50 ஆண்டுகள் நிறைவை இந்த ஆண்டு பூர்திசெய்துள்ளமைக்கு வாழ்த்து கூறி, நடிகை மீனா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டவர்களுடன் ஹீரோயினாக நடித்து மிகப்பெரிய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக காணொளி வெளியிட்ட மீனா! என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? | Actress Meena Wishing Rajinikanth Video Viral

80களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பின் 90களில் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கொடிகட்டி பறந்தவர்.

அவர் ரஜினி உடன் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் மிகவும் பிரபலமான படம் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பின்னர் ரஜினிக்கு ஜோடியாகவே எஜமான், முத்து போன்ற படங்களில் நடித்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக காணொளி வெளியிட்ட மீனா! என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? | Actress Meena Wishing Rajinikanth Video Viral

இந்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் மீனாவின் அழகுக்கு இன்றும் ரசிகர்கள் இருக்கின்றார்கள். தற்போது சினிமா துறையில் இருந்து விலகியிருக்கும் நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக காணொளி வெளியிட்ட மீனா! என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? | Actress Meena Wishing Rajinikanth Video Viral

இந்நிலையில் நடிகை மீனா தற்போது ரஜினியின் சிறப்பு குணங்கள் பற்றி பேசியதுடன், ரஜினியின் ரசிகையாக இவரின் கூலி படத்துக்கும், 50 ஆண்டு கலை பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கும் வாழ்த்து தெரிவித்து தற்போது ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading