ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி – ட்ரம்புக்கு நாடாளுமன்றத்தில் பின்னடைவு
அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி (Democratic Party) செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
இதனால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அரசியல் மற்றும் சட்டமன்ற சவால்கள் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செனட் சபையில் ஜனநாயகக் கட்சி குறைந்தது 54 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது.
பிரதிநிதிகள் சபையில் குறைந்தது 28 இடங்களைப் புதிதாகப் பெற்று பெரும்பான்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

டெக்சாஸில் பல தசாப்தங்களுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி செனட் இடத்தைக் கைப்பற்றியதுடன், ஆளுநர் கிரெக் அபாட்டையும் தோற்கடித்துள்ளது.
கன்சாஸில் சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி செனட் இடத்தை வென்றுள்ளது. அலாஸ்கா, மிசிசிப்பியில் தேர்தல் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, வாக்காளர்களின் அதிருப்திக்கு மூன்று முக்கிய காரணங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
1. ஈரானுடனான போர் காரணமாக அதிகரித்த பொருளாதாரச் சுமை.
2. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு
3. ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் என்பனவே அவையாகும்.
இந்த நிலையில், தேர்தல் தோல்விக்குப் பிறகு ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்து, வெள்ளை மாளிகையில் கட்டப்பட்டுவரும் பிரம்மாண்டமான போல்ரூம் (Ballroom) திட்டத்தைச் சுற்றிக் காண்பித்துள்ளார்.

தேர்தல் தோல்வி குறித்து அவர் சுருக்கமாகப் பேசியதுடன், ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும், அதேவேளை தனக்கு வீட்டோ அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்த தேர்தலில் முக்கிய அரசியல் சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன.
ஜோர்ஜியாவில் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் அமெரிக்க வரலாற்றில் முதல் கறுப்பினப் பெண் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நியூ மெக்சிகோவில் டெப் ஹாலண்ட் முதல் பூர்வீக அமெரிக்கப் பெண் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மிச்சிகனில் அப்துல் எல்-சயீத் செனட் உறுப்பினராக வெற்றி பெற்று, செனட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
மேலும், அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், “டொனால்ட் ட்ரம்ப் இன்னும் அமெரிக்காவின் ஜனாதிபதியாகவே உள்ளார்” என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இடைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க அரசியல் தரப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள வெள்ளை மாளிகை, தேர்தல் முடிவுகள் எவ்வாறாக இருந்தாலும் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகள் அமெரிக்க காங்கிரஸின் அதிகாரச் சமநிலையிலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You must be logged in to post a comment.