Local

ஜனாதிபதியின் ஆயுட் காலம் ஒரு வருடத்துக்கு நீடிப்பு ?

சர்வஜன வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஊடாக ஜனாதிபதி பதவியை ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது என்று ஜனாதிபதி வட்டாரத்தின் ஊடாக அறிய முடிகிறது.

இது தொடர்பாக அரசு சட்ட வல்லுனர்களுடன் ஆராய்ந்து வருகிறது என்று அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.

முதலில் சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக இரண்டு வருடங்களுக்கு தேர்தலை ஒத்திப்போடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது.அதற்கு அனைவரினதும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டு நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியின் ஆயுட் காலத்தை ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறது.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதியின் ஆயுட்காலம் 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களுக்கு குறைக்கப்பட்டது.அந்த ஒரு வருடத்தை இப்போது நீடிக்கலாம் என்று சில சட்ட வல்லுநர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்தே மேற்படி நீட்டிப்பு தொடர்பில் ஜனாதிபதி தரப்பு களத்தில் இறங்கியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading