Local

ஜனாதிபதியின் உத்தரவுகளை மட்டுமே கேட்பேன்! – பொலிஸ்மா அதிபர் அதிரடி

ஜனாதிபதியினால் வழங்கப்படும் உறுதியான ஆலோசனை மற்றும் கட்டளைக்கமைய மாத்திரமே பொலிஸ் திணைக்களம் செயற்படும் எனப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே பொலிஸ்மா அதிபர் இதனைக் கூறியுள்ளார்.

அதேநேரம், சட்டம், ஒழுங்கு அமைச்சராக ஜனாதிபதியே செயற்படுகின்றார் எனவும் பொலிஸ்மா அதிபர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவே பொலிஸார் செயற்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ரஞ்சித் மத்தும பண்டாரவினால் பொலிஸ் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தை அங்கீகரிக்க முடியாது எனவும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading