Local

இலங்கை ஜனாதிபதியின் செலவினம் மூன்று மடங்காக அதிகரிப்பு ? 

 

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2026 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதியின் செலவினம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறும் ஊடக அறிக்கைகளை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த நிராகரித்துள்ளார்,

செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

2.9 பில்லியன் ரூபாயில் தொடங்கிய 2025ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில், பாதீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முழு செலவீனங்களும் சேர்க்கப்படவில்லை என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

தூய்மையான இலங்கை திட்டத்திற்காக தனித்தனியாக ரூ. 5.05 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், புதுமை மற்றும் வணிகமயமாக்கல் தொடர்பான ஆராய்ச்சிக்காக கூடுதலாக ரூ. 1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

“எனவே, 2025 ஆம் ஆண்டின் ஜனாதிபதி செலவினங்களுக்கான துல்லியமான ஒதுக்கீடு ரூ. 9 பில்லியனாக இருக்கும்.

ஊடக அறிக்கைகளின் படி, 2026ஆம் ஆண்டு ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் செலவினத்தை ரூ. 11.6 பில்லியனாக ஒப்பிடுகின்றன,

இதில் ஏற்கனவே தூய்மையான இலங்கை திட்டம் மற்றும் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகளும் அடங்கும்,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

சில ஊடகங்கள் செய்த ஒப்பீடு தொழில்நுட்ப ரீதியாக குறைபாடுடையது என்று மேலும் வலியுறுத்திய அமைச்சர், இந்தத் தவறு காரணமாக போலியான தகவல்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

செப்டம்பர் 26 ஆம் திகதி வெளிநாட்டில் இருந்த ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அனுர குமார திசாநாயக்கவின் சார்பில், 2026க்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading