ஜனாதிபதியின் தவறான கொள்கையால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!

உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள அரசாங்கம் இந்தியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலிடமிருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அல்லது மரவள்ளிக்கிழங்கு ,பயறு உள்ளிட்ட மேலதிக பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க வேண்டும் என ஒன்றினைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.
தேசிய விவசாயத்துறை வீழ்ச்சிக்கும்,எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறையினால் ஏற்பட போகும் விளைவிற்கான பொறுப்பையும் ஜனாதிபதி ஏற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றினைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு எதிர்வரும் காலங்களில் உலகளாவிய ரீதியில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பல்வேறு தரப்பினர் எதிர்வு கூறியுள்ளனர்.
விவசாயத்துறையின் முன்னேற்றமடைந்த நாடுகள் கூட உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ளும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. பெருமளவிலான நாடுகள் உணவினை களஞ்சியப்படுத்தி வருகின்றன.
தவறான உர கொள்கையினால் கடந்த காலங்களில் பெரும்போக விவசாயமும்,சிறுபோக விவசாயமும் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. எரிபொருள் பற்றாக்குறை,மற்றும் உரம் இன்மை ஆகிய காரணிகளினால் இம்முறை சிறுபோக விவசாயமும் பாதிக்கப்படும்,50 சதவீத விளைச்சலை கூட பெறுவது சாத்தியமற்றது.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உரம் இன்மையினால் அரிசி பயிர்ச்செய்கையில் ஈடுப்படும் பிரதான மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் விவசாயத்தில் ஈடுப்படுவதை புறக்கணித்துள்ளார்கள்.எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நிச்சயம் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயத்துறை நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள்
