Local

ஜா-எலயில் உள்ள மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் 90 பேருக்கு கொரோனா!

கம்பஹா – ஜா எல பகுதியில் உள்ள மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த நிறுவனத்தின் 50 சதவீதமான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டவரிகளிடம் மூன்று தடவைகள் பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் 198 பேரில் 90 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் விருந்துபசார நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading