ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிறுவனத்தின் TRI‑ZEN செயற்திட்டத்தில் Tea Avenue Café திறந்து வைக்கப்பட்டுள்ளது
ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிறுவனத்தின் முக்கியத்துவம் வாய்ந்த குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டமான TRI‑ZEN, மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் தற்கால வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகள் ஆகியவற்றின் சிறப்பாக இணைப்புடன் நகர்ப்புற வாழ்க்கைமுறையில் தொடர்ந்தும் திருப்புமுனையை ஏற்படுத்தி வருகின்றது. வானளாவிற்கு உயர்ந்த இரு கட்டடத் தொகுதிகளில் மொத்தமாக 897 அடுக்குமனைகளைக் கொண்டுள்ள TRI‑ZEN, சமகாலத்திற்கு ஏற்ற நகர்ப்புற வாழ்வின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள உதவும் விரிவான வசதிகள் அனைத்தையும் கொண்ட திறன்மிக்க வாழ்விடங்களை குடியிருப்பாளர்களுக்கு வழங்குகின்றது. பல நீச்சல் தடாகங்கள், இரண்டு உடற்பயிற்சிக்கூடங்கள், மேற்தட்டில் அமைந்துள்ள பாட்மின்டன் விளையாட்டுத் திடல், நடைப்பயிற்சி மற்றும் சைக்கிளோட்டத்திற்கான ஏற்பாடுகள், சமூக ஒன்றுகூடல் மற்றும் நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டிடங்கள், மினி சினிமா, சிறுவர்களுக்கான விளையாட்டு ஏற்பாட்டு வசதிகள், அழகாக அமைக்கப்பட்டுள்ள வெளிப்புறங்கள் என சுறுசுறுப்பான, அன்னியோன்னியமான, மற்றும் சௌகரியமான வாழ்வை குடியிருப்பாளர்கள் அனுபவித்து மகிழலாம்.
குடியிருப்பாளர்களுக்கு கிடைக்கும் சௌகரியமான அனுபவங்களை மேற்படுத்துவதில் மற்றுமொரு பரிமாணத்தைச் சேர்ப்பிக்கும் வகையில், Tea Avenue உடன் இணைந்து Tea Avenue Daily Brew என்ற சிற்றுண்டிச்சாலையை TRI‑ZEN திறந்து வைத்துள்ளது. இது பிரத்தியேகமாக TRI‑ZEN குடியிருப்பாளர்களுக்கு தனது சேவைகளை வழங்குகின்றது. வழக்கமான உணவு விருந்தானாலும் சரி, சாதாரண சந்திப்புக்களானாலும் சரி, அல்லது சற்று ஓய்வாக அமர்ந்து அமைதியாக பொழுதைப் போக்க விரும்பினாலும் சரி, குடியிருப்பின் உள்ளேயே இவை அனைத்தையும் இங்கேயே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
குடியிருப்பு வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் மிகவும் நேர்த்தியாக, TRI‑ZEN க்காக பிரத்தியேகமாக வழங்கப்படும் விசேடமான தேநீர் மற்றும் சிற்றுண்டி வகைகளின் உணவு மற்றும் பான வகைப் பட்டியலை இச்சிற்றுண்டிச்சாலை கொண்டுள்ளது. TRI‑ZEN குடியிருப்பின் தனித்துவமான பண்பையொத்தவாறு இச்சிற்றுண்டிச்சாலையும் சௌகரியம், இலகுவான அணுகல், மற்றும் பிரத்தியேகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிறுவனத்தின் ஆதனத் துறைக்கான தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட உப தலைவருமான இனோக பெரேரா அவர்கள் இக்கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவிக்கையில்:
“அன்றாட வாழ்வை உண்மையிலேயே மேம்படுத்தும் வசதிகளே TRI‑ZEN வழங்கும் வாழ்க்கை அனுபவத்தின் தனித்துவம். TRI‑ZEN குடியிருப்பாளர்களுக்கு வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதற்கான மற்றுமொரு ஏற்பாடாக, நடைமுறைக்கு அமைவான, குடியிருப்பாளர்களின் சௌகரியத்தை இலக்காகக் கொண்ட Tea Avenue Daily Brew மாறியுள்ளது.”
Tea Avenue நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சஜீவ் டி சில்வா அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்:
“இந்த ஒத்துழைப்பானது குடியிருப்பொன்றின் மத்தியில் எமது சிற்றுண்டிச்சாலை சேவையை வழங்கும் ஏற்பாட்டுக்கு எமக்கு இடமளித்துள்ளது. நாம் வழங்கும் உணவு மற்றும் பான வகைகள் அனைத்தும் TRI‑ZEN குடியிருப்பாளர்களுக்கு பிரத்தியேகமான அனுபவத்தை கிடைக்கச் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதுடன், எளிமையையும், நிலைமாறாத வகையில் அனைத்தும் கிடைப்பதையும், மற்றும் அனைவரும் மீண்டும் வருவதற்கு தூண்டும் வரவேற்பு அனுபவத்தையும் அவர்களுக்கு கிடைக்கச் செய்வதில் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.”
குடியிருப்பாளர்கள் மிகவும் மதிக்கின்ற அவர்களின் அந்தரங்கம் மற்றும் பிரத்தியேகம் ஆகியவற்றைப் பேணி, அன்றாட வாழ்வில் சிறந்த அனுபவத்தைச் சேர்ப்பிக்கும் வகையில் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வசதிகளுடன், நகர்ப்புற வாழ்வில் அனைத்தும் ஒன்றுசேர கிடைக்கப்பெறுவதில் முன்மாதிரியொன்றை நிலைநாட்டியுள்ள TRI‑ZEN, தற்போது Tea Avenue Daily Brew சிற்றுண்டிச்சாலையை திறந்து வைத்துள்ளதன் மூலமாக அதனை மேலும் சிறப்பித்துள்ளது.
TRI‑ZEN வழங்கும் வாழ்க்கைமுறையை அனுபவிப்பதற்கு நீங்கள் தயாரா? அவ்வாறெனில் www.trizen.lk என்ற இணையத்தளத்தைப் பாருங்கள் அல்லது 0702 294 294 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.

You must be logged in to post a comment.