Local

ஞானசார விவகாரம் குறித்து வலுக்கும் எதிர்ப்பு…!!!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைச்சாலை ஆடை அணிவித்து நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தமை தொடர்பில் அவரது சபையைச் சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

துறவிக்குரிய ஆடையை அணிவதற்கோ அல்லது அதைக் களைவதற்கோ அவருக்கும் அவர் சார்ந்த சபைக்கு மட்டுமே முழு உரிமை உண்டு என மஹா விகாரவம்ஷிக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஸ்ரீ கல்யாணி சமக்ரி தர்ம மகா சங்க சபையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஞானசார தேரர் விவகாரம் தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பிய உத்தியோகபூர்வ கடிதத்தில் இந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளனர்.

பௌத்த துறவியின் ஆடையைக் களையும் அதிகாரம்! ஞானசார விவகாரம் குறித்து வலுக்கும் எதிர்ப்பு | Gnanasara Thero Dress Arrest Court

குறித்த சபையின் சிரேஷ்ட பேராசிரியரும் துணைத் தலைவருமான கோட்டபிட்டிய ராகுல தேரர், துறவிக்குரிய அங்கியை அணிவதற்கும் அகற்றுவதற்குமான அதிகாரம் அந்தத் துறவிக்கும் அவர் உறுப்பினராக இருக்கும் மகா சங்க சபைக்கும் மாத்திரமே உண்டு என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பௌத்த துறவற அமைப்பின் விதிகளின்படி, ஒரு துறவி, தனது அங்கியை அணிய மற்றும் வைத்திருக்க அனுமதிப்பதும் அவர் வெளியே அழைத்து வரப்படும் போதெல்லாம் நிர்ணயிக்கப்பட்ட அங்கியில் தோன்றுவதை உறுதி செய்வதும் மத மற்றும் ஆன்மீகக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த ஒரு பாரம்பரிய நடைமுறையாகும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குறித்த துறவியின் அங்கி பறிக்கப்படக்கூடாது எனவும் அவர் அதை அணிந்தவாறே தோன்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ராகுல தேரர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading