GossipWorld

டியூஷன் சென்ற இடத்தில் 16 வயது மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை!

உத்தரபிரதேசத்தில் டியூஷன் சொல்லிக் கொடுத்த ஆசிரியை ஒருவர், தன்னிடம் படித்த 16 வயது மாணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார்-123 பகுதியை சேர்ந்த 22 வயது ஆசிரியை ஒருவர், அவரது வீட்டில் குழந்தைகளுக்கு டியூஷன் கற்பித்து வந்தார். ஆசிரியையின் வீட்டிற்கு அருகே 16 வயது மாணவனின் குடும்பமும் வசித்து வருகிறது.

அந்த மாணவன் ஆசிரியையிடம் டியூஷன் சென்று படித்து வருவது வழக்கம். இந்நிலையில் அந்த மாணவனிடம் மிகவும் நெருக்கமாக பழகிய ஆசிரியை, நேற்று முன்தினம் மாணவனை தன்னுடன் அழைத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த மாணவரின் தந்தை, டியூஷன் சென்ற தனது 16 வயது மகன் மீண்டும் வீடு திரும்பவில்லை எனக்கூறி போலீசில் புகார் அளித்தார்.

அதையடுத்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து கூடுதல் டி.சி.பி அசுதோஷ் திரிவேதி கூறுகையில், ‘ஆசிரியைக்கும், மாணவனுக்கும் இடையே காதல் விவகாரம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் எங்கு சென்றுள்ளார்கள்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading