World

உலகின் மிகவும் வயதான கன்னியாஸ்திரி காலமானார்!

உலகின் மிகவும் வயதான நபரான லுசில் ராண்டன் என்ற பிரான்ஸ் கன்னியாஸ்திரி காலமானார்.

பிப்ரவரி 11, 1904 அன்று பிரான்சின் தெற்கில் பிறந்த கன்னியாஸ்திரி உயிரிழந்த போது 118 வயது ஆகும்.

அவர் டூலோனில் உள்ள தனது முதியோர் இல்லத்தில் தூக்கத்தில் உயிரிழந்தார் என அவரது செய்தித் தொடர்பாளர் டேவிட் டவெல்லா வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டில், கோவிட் -19 தொற்றுநோய் அவர் தங்கிருந்த முதியோர் இல்லத்தில் 10 பேரை பலியெடுத்தது. எனினும், அவர் அந்த பேரழிவிலிருந்து தப்பினார்.

சகோதரி லூசில் ராண்டன் 1944 இல் ஒரு கான்வென்ட்டில் பிரவேசிப்பதற்கு முன்னர் ஆளுநராகவும் ஆலோசகராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading