டிரம்பை கிண்டல் செய்யும் ஈரான்: வைரலாகும் வீடியோ
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கிண்டல் செய்து ஈரான் அரசு அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஈரான் டிஜிட்டல் தாக்குதல்
சமீபத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகையில் இரவு விருந்து நிகழ்ச்சியில் கோல் ஆலன் என்ற நபர் திடீர் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தினார்.
இந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலினா டிரம்ப் மற்றும் பல்வேறு அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கிண்டல் செய்து ஈரான் தரப்பு லெகோ(Lego) பாணி அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் நிலவி வரும் பிராந்திய போர் பதற்றம் டிஜிட்டல் தள போராகவும் மாறியுள்ளது.

அந்த வீடியோவில், துப்பாக்கி சூடு சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அனிமேஷன் வீடியோவின் ராப் பாடல் வரிகளில் டிரம்பின் செல்வாக்கு குறையும் போதெல்லாம் மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர் இது போன்ற நாடகங்களை அரங்கேற்றுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் டிரம்பின் ஆளுமை மிகவும் பலவீனமானது, அவரால் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாது என்றும் கிண்டல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது, அதை அவரது ஆதரவாளர்களே உணர தொடங்கி விட்டனர். மீடியாக்களை டிரம்ப் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நடக்கும் விவகாரங்களின் கதையை மாற்றலாம், ஆனால் அது ஈரானிடம் பலிக்காது, உண்மையில் நீங்கள் தோல்வியாளரே என்று வீடியோவின் பாடல் வரிகள் உள்ளன.
Diss Track என்ற ராப் இசை வடிவில் அமைந்துள்ள இந்த அனிமேஷன் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.