டிரம்ப்பின கோபத்தை தூண்டிய ஈரானிய தலைவரின் இறுதி ஊர்வலம்…!!!
ஈரானிய மக்களைப் பாதுகாக்கப் போகிறேன்” என்ற வாக்குறுதியுடன் போர் நடவடிக்கைகளைத் தொடங்கிய ட்ரம்ப்பிற்கு, அதே ஈரானிய மக்கள் வழங்கிய பதில் மிகக் கடுமையானதாக இருந்தது.
தெஹ்ரானில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு, அமெரிக்காவிற்கு எதிராகவும், ட்ரம்ப்பிற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக, “கொல்லுங்கள் ட்ரம்ப்பை” (Kill Trump) போன்ற பதாகைகளை ஏந்திய மக்களின் உணர்வுகள், ட்ரம்ப்பின் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக அமைந்தன.
தான் ஈரானிய மக்களால் வரவேற்கப்படுவோம் என்று நினைத்த ட்ரம்ப், அந்த மக்கள் தன் மீது கொண்ட ஆத்திரத்தைக் கண்டு கடும் எரிச்சலுக்கு ஆளானார்.
இது குறித்து ஊடகங்களிடம் அவர் வெளிப்படுத்திய கடுமையான வார்த்தைகள், அவரது அரசியல் தோல்வியையும், இயலாமையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டின.
உலக வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகவும், ஈரானியர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் சுதந்திர தின நிகழ்வுகளின் கவனத்தை ஈரானின் பக்கம் திசை திருப்பிய இந்த நிகழ்வு, உலகின் ஒட்டுமொத்தப் பார்வையும் ஈரானின் மீதே நிலைத்திருக்கச் செய்தது.
இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் ஒரு தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றது, அந்தத் தலைவரின் மீது ஈரானிய மக்கள் வைத்திருந்த ஆழமான பிணைப்பை நிரூபித்தது.
ஈரானியத் தலைவர்களின் நிதானமான நகர்வுகளும், மக்களின் உறுதியான எதிர்ப்பும் ட்ரம்ப்பின் போர்க்கால வியூகங்களைச் சிதைத்துள்ளன.
அதிகாரத்தின் மமதையில் ஊறிப்போன ட்ரம்ப், ஈரானின் இராணுவ வலிமையைக் கிழித்துவிட்டதாகத் தற்பெருமை பேசியபோது, மறுபுறம் அவர் உள்ளுக்குள் எவ்வளவு நடுங்கிக் கொண்டிருந்தார் என்பதற்கு, அரபு நாடுகளின் அடிவருடிகள் மூலம் அவர் அனுப்பிய சமரசத் தூதுகளே சாட்சி.
போரைத் தொடங்கும் போது வீரவசனம் பேசியவர், ஈரானிய மக்களின் உறுதியைக் கண்டு மிரண்டு, இப்போது மீண்டும் தன் படைகளை எமதளத்திற்கு அனுப்பும் அளவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
இது ஒரு நாட்டின் அதிபரின் செயலாகத் தெரியவில்லை; தன் பிம்பம் உடைந்துவிடுமோ என்ற பயத்தில் அலையும் ஒருவனின் விகாரமான தத்தளிப்பாகவே தெரிகிறது.
ஆனால், ஈரானியத் தலைவர்கள் இத்தகைய தூதுகளைப் புறக்கணித்து, சரியான தருணம் பார்த்துச் செயல்பட்ட விதம், ட்ரம்ப்பின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இன்னும் சில ஊடகங்கள், ட்ரம்பின் பொய்களைப் பட்டை தீட்டிச் செய்திகளாக்கத் துடிக்கின்றன.
இதன் மூலம் ஈகோவை தூண்டப்பட்ட ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் காரணம் காட்டி, ட்ரம்ப் மீண்டும் தனது ஆக்ரோஷமான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளார்.
ஜூன் மாதம் கையெழுத்தான ‘இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை’ தூக்கியெறிந்த ட்ரம்ப், சுமார் 80 ஈரானிய இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளார். இது வெறும் பழிவாங்கல் அல்ல, ஈரானிய மக்களின் எழுச்சியால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடு.
ஒரு நாட்டின் இறையாண்மையைத் தன் சுயலாபத்திற்காகப் பகடையாடிய ட்ரம்பின் இந்த ‘நாடகம்’, இப்போது விபரீதத்தை நோக்கி நகர்கிறது.
ஈரானிய தலைவர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குக் கோபத்தால் பதில் சொல்லாமல், நிதானத்தோடு சாதித்த அந்தப் புத்திசாலித்தனமான நகர்வு, ட்ரம்பின் ஆத்திரத்தை இன்னும் அதிகரித்துள்ளது.
ஒரு சர்வதேசத் தலைவர் என்பவர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு டொனால்ட் ட்ரம்பே சிறந்த உதாரணம்.
ஈரானின் இராணுவக் கட்டமைப்புகளைத் தகர்த்துவிட்டதாகத் தற்பெருமை பேசும் ட்ரம்ப், உண்மையில் மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை எதிர்கொள்கிறார்.
போரை முடிப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மீண்டும் படைகளை எமதளத்திற்கு அனுப்பும் அவரது நடவடிக்கை, ஒரு நாட்டின் அதிபராகத் திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை.
மாறாக, தனது ஈகோவைக் காப்பாற்றிக்கொள்ள அவர் எடுக்கும் மிகக் கொடூரமான முடிவாகவே தெரிகிறது.
ட்ரம்பின் “அதிகாரப் போர்” ஈரானை மண்டியிட வைக்கும் என்று அவர் கணக்குப் போட்டிருக்கலாம்.
ஆனால், தனது தலைவனுக்காகத் திரண்ட ஈரானிய மக்களின் வீரம், ட்ரம்பின் போர்க்காலத் தந்திரங்களைச் சின்னாபின்னமாக்கிவிட்டது.
அமெரிக்கா நடத்தும் ஒவ்வொரு வான்வழித் தாக்குதலும், ட்ரம்ப் சொன்ன பொய்களின் கோபுரத்தைத் தகர்க்கும் ஆயுதமாகவே மாறியுள்ளது.
உலகமே உற்றுநோக்கும் இந்தச் சூழலில், ட்ரம்பின் இந்த வெறித்தனமான பயணம், அவரை வரலாற்றின் “கொடுங்கோல் அரக்கர்கள் “ பட்டியலிலேயே கொண்டு சேர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

You must be logged in to post a comment.