Local

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11.3 சதவீதம் உயர்வு

இந்த வருடத்தின் நவம்பர் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 11.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், இந்தக் காலப்பகுதியில் இலங்கை ரூபா பல வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் வலுவடைந்துள்ளதாகஅண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, யூரோவுடன் ஒப்பிடும்போது 16.7 சதவீதமும், ஸ்டெர்லிங் பவுண்டுடன் ஒப்பிடும்போது 11.6 சதவீதமும், சீன யுவானுடன் ஒப்பிடும்போது 13.6 சதவீதமும் இலங்கை ரூபா வலுவடைந்துள்ளது.

ஜப்பானிய யென்னுடன் ஒப்பிடும் போது 18.4 சதவீதமும், அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராக 17.1 சதவீதமும், இந்திய ரூபாய்க்கு எதிராக 13.2 வீதமும் இலங்கை ரூபா வலுப்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading