World

ட்ரம்பின் ‘Golden Dome’ எப்படி இருக்கும்? வெளியாகியுள்ள புகைப்படம்

அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், ‘Golden Dome’ என்னும் ஒரு விடயம் குறித்து பேசிக்கொண்டே இருக்கிறார்.

அந்த கோல்டன் டோம் என்பது என்ன என்பதைக் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, உலகின் எந்த பாகத்திலிருந்து அமெரிக்காவை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டாலும், அவை அமெரிக்காவை தாக்காதபடிக்கு, அவற்றை தடுத்து அமெரிக்காவை பாதுகாப்பதற்காகத்தான் இந்த கோல்டன் டோம்.

trump us golden dome

அமெரிக்க பாதுகாப்பு உளவு ஏஜன்சியான DIA, இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அந்த புகைப்படம், சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியாவிலிருந்து ஏவுகணைகள் அமெரிக்காவை நோக்கி ஏவப்பட்டாலும், அவை அமெரிக்காவைத் தாக்காது, அமெரிக்க மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதை உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது.

us golden dome photo

ஏற்கனவே இஸ்ரேலில் Iron Dome என்னும் பாதுகாப்பு அமைப்பு ஒன்று உள்ளது. ஆனால், அமெரிக்கா திட்டமிடும் இந்த கோல்டன் டோம், Iron Domeஐ விட மிகப்பெரியதாகும்.

இந்த கோல்டன் டோம் மூன்று ஆண்டுகளுக்குள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அதை உருவாக்க சுமார் 175 பில்லியன் டொலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading