World

ட்ரம்புக்கு எதிராக போராடுமாறு அமெரிக்க மக்களுக்கு ஈரான் அழைப்பு!

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்துள்ள போர் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறியுள்ள ஈரானின் புரட்சிப் படை (Revolutionary Guard), வரவிருக்கும் இடைத்தேர்தலில் அமெரிக்க மக்கள் வீதியில் இறங்கி டிரம்ப்பிற்கு எதிராகப் போராட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

ஈரான் தலைநகர் தஹ்ரானில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பை நடத்திய புரட்சிப் படையின் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி (Gen. Hossein Mohebbi), “அமெரிக்க மக்களுக்கு அனுப்பும் கடிதம்” எனக்கூறி ஒரு அறிக்கையை வாசித்தார்.

அதில், “அமெரிக்கா தனது தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறுவது மட்டுமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வரவிருக்கும் நவம்பர் 3 அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலை இலக்காகக் கொண்டு இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி, நாடாளுமன்றத்தின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ளக் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

பின்னர் அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்திடம் பேசிய மொஹெப்பி, அமெரிக்க அரசின் “போர்வெறி பிடித்தக் கொள்கைகளை” கண்டிக்கும் வகையில், மக்கள் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என்றும், தங்கள் தலைவர்கள் குறித்த முடிவை அமெரிக்கர்கள் “மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading