ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை குறைக்கும் யோசனையையும் முன்வைத்துள்ளார்.
இந்தப் புதிய நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா, தனது X (முன்னைய Twitter) பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது பதிவில், மலிவுவிலை மருத்துவ பராமரிப்பு சட்டத்தை (Affordable Care Act) பலவீனப்படுத்தும் இந்த முயற்சியின் விளைவாக, 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயம் உருவாகும் என எச்சரித்துள்ளார்.

You must be logged in to post a comment.