Local

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் டெல்டா தொற்றும் வாய்ப்பு!

வேகமாக பரவக்கூடிய தன்மையுடைய டெல்டா வைரஸ் திரிபு முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கும் தொற்றக்கூடிய வாய்ப்புள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வின் தகவல்களை நேச்சர் ஏனும் சஞ்சிகை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய டெல்டா திரிபு மனிதர்களின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பை கடந்துசெல்லக்கூடியது என குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், குறித்த ஆய்வை மேற்கோள் காட்டி டெல்டா திரிபு இவ்வாறு நோய் எதிர்ப்பு கட்டமைப்பை கடந்து செல்லக்கூடிய ஆற்றல் உள்ளமையை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, உறுதிப்படுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும், கொரோனா தொற்று பரவுவதை தவிர்க்க சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றவேண்டிதன் முக்கியத்துவத்தையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading