Sports

மகளிர் கிரிக்கெட்டை ஆதரிக்காவிட்டால் ஆப்கான் தொடர் ரத்து அவுஸ்திரேலியா அறிவிப்பு

மகளிர் கிரிக்கெட்டை ஆப்கானிஸ்தான் ஆதரிக்காவிட்டால், அவர்களுடனான டெஸ்ட் தொடரை ரத்து செய்வோம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் போட்டி நவம்பர் 27 முதல் ஆஸ்திரேலியாவின் தீவு மாகாணமான டாஸ்மேனியாவின் ஹோபார்ட்டில் உள்ள பெல்லரைவ் ஓவலில் நடைபெறவிருந்தது.

2016 ஆம் ஆண்டுக்கு பிறகு டாஸ்மேனியா முதல் டெஸ்ட் போட்டியை நடத்த தயாராகி வந்தது.

இந்நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் முக்கியமானது.

கிரிக்கெட்டு குறித்த எங்கள் பார்வை, இது அனைவருக்குமான ஒரு விளையாட்டு மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களுக்கான விளையாட்டை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரிக்கிறோம்.

ஆப்கானிஸ்தானில் மகளிர் கிரிக்கெட்டை ஆதரிக்க முடியாது என்று சமீபத்தில் ஊடகங்களில் வெளியான அறிக்கைகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், ஹோபார்ட்டில் ஆப்கானிஸ்தானுடன் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்ட டெஸ்ட் போட்டியை ரத்து செய்வது தவிர கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு வேறு வழியில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading