World

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு முடக்க நிலை அறிவிப்பு!

ஒஸ்திரியாவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோருக்கான முடக்கநிலை தொடங்கியுள்ளது. அங்கு கட்டுக்கடங்காமல் கொரோனா தொற்று அதிகரிப்பதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோருக்கான முடக்கநிலையை அறிவித்துள்ள முதல் நாடு ஒஸ்திரியா.

அங்கு சுமார் 65 வீதமானவர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஐரோப்பாவின் மேற்குப் பகுதி நாடுகளில் பதிவாகியிருக்கும் ஆகக் குறைவான வீதங்களிர் இதுவும் ஒன்று.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் சராசரி வீதம் 67 ஆக காணப்பட, அந்த மட்டத்தை விட ஒஸ்திரிய நிலைமை குறைவாக காணப்படுகிறது.

கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து ஒஸ்திரியாவில்11,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading