Cinema

தத்து எடுக்கவில்லை பெற்று எடுத்த குழந்தை முக்கிய ரகசியத்தை பகிர்ந்த நடிகை ரேவதி!

பிரபல நடிகை ரேவதி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த முக்கிய தகவலை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.

1983ம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் மண்வாசனை. இத்திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரேவதி. பின்னர் கன்னி ராசி, பகல் நிலவு, மெளன ராகம், புன்னகை மன்னன், அஞ்சலி, மகளிர் மட்டும் போன்ற பல படங்களில் நடித்தார்.

1988ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் 27வருடங்கள் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்த்து வந்தனர்.

இருப்பினும் இவர்களுக்கு குழந்தை இல்லாததால் இவர்களுக்கு இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2002ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில், நடிகை ரேவதி, அனைவரும் வாய் பிளக்கும் வகையில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். விவகாரத்து ஆன பின், எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாக அறிவித்தேன். அந்த குழந்தையை நான் தத்து எடுத்ததாக பலரும் கூறுகின்றனர்.

உண்மையில் அது தத்து எடுத்த பிள்ளை இல்லை டெஸ்ட் டியூப் வழியாக கருவுற்று நான் பெற்றெடுத்த குழந்தை என்று கூறியுள்ளார். பலரும் தான் தத்து எடுத்து வளர்ந்து வருவதாக தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading