LocalNorth

யாழில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஹெரோயினுடன் கைது! – மகனுக்கு தாயாரே வைத்தார் ஆப்பு

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை அவரது தாயார் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே கைது செய்தோம் என்று பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் வைத்துச் சந்தேகநபர் கடந்த செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 200 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாகக் கடமையாற்றுகின்றார்.

விசாரணைகளின் பின் அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த புதன்கிழமை முற்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

தனது மகன் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுடன் பொம்மைவெளிப் பகுதியில் நடமாடுகின்றார் என்று சந்தேகநபரின் தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading