Sports

தலைவர் பதவியை பொறுப்பேற்க தயார் பும்ரா பரபரப்பு பேட்டி!

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அடுத்து இந்திய அணியின் கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அளித்துள்ள ஒரு பேட்டியில், “டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு எடுத்தது குறித்து மீட்டிங்கில் அணி வீரர்களிடம் விராட் கோலி கூறினார். அவரது தனிப்பட்ட முடிவை நாங்கள் மதிக்கிறோம். அணிக்கு கேப்டனாக அவர் அளித்த பங்களிப்புக்காக நாங்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம். 

அவர் எடுத்த முடிவு சரியா தவறா என்று நான் கருத்து கூற முடியாது. விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது.  அவர் அணியில் ஒரு முக்கிய நபராக எப்போதும் இருப்பார். அணிக்காக அவர் நிறைய பங்களித்துள்ளார். இன்னும் நிறைய பங்களிப்பை வருங்காலத்தில் அளிப்பார்.

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால் அதை மிகவும் கெளரவமாக  கருதுவேன். எந்த ஒரு வீரரும் இந்திய அணியின் கேப்டன் பதவியை வேண்டாம் என்று சொல்லமாட்டார். நானும் அதற்கு விதிவிளக்கல்ல” என கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading