Local

தாயகமெங்கும் மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்!

தமிழர் தாயகமெங்கும் நேற்று மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. வடக்கு – கிழக்கில் பல இடங்களில் நேற்று மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் அமைதியாக நடைபெற்றன.

தமிழர்களின் உரிமைக்காக – தமிழீழ இலட்சியத்துக்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி வீரகாவியமான மாவீரர்களை நினைவு கூர்ந்து தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நவம்பர் 21 முதல் 27 வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஆரம்ப நாள் நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும் நடந்தன. அத்துடன் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

கடந்த முறையை விட இம்முறை மிகவும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் வார நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் இடம்பெறுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலை மோசமடைந்துள்ள நிலையிலும் மாவீரர் வாரத்தை உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் தடையின்றி இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading