Cinema

திடீரென உயிரிழந்த பிரபல நடிகையின் உடலில் காயங்கள்!

நடிகை சோனாலி போகத் மரண விவகாரத்தில் அவரது உதவியாளர், நண்பர் ஆகியோர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானா மாநில நடிகையும், பாஜக பிரமுகருமான சோனாலி போகத் (42) மர்மமான முறையில் கோவாவில் உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை ஆய்வில் அவரது உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். கோவாவிற்கு சோனாலி போகத்துடன் வந்த அவரது உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் வாசி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கோவா போலீசார் கூறுகையில், ‘சோனாலி மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

சோனாலியின் உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் பார்த்தால் சோனாலியின் உடலில் காயங்கள், கீறல்கள் இருந்தன. அவர் இறப்பதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு இந்த காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். சம்பவ நாளில் அஞ்சுனா கடற்கரைக்கு அருகில் உள்ள கர்லீஸ் என்ற தனியார் குடிலுக்கு சோனாலி சென்றுள்ளார். அன்றிரவு முழுவதும் அவர் மனஉளைச்சலில் இருந்தார்.

அவரது நண்பர்கள் சிலர், அவரை மருத்துவமனைக்குச் செல்லும்படி அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், அதற்கு ​​​​அவர் மறுத்துவிட்டார். திடீரென மயங்கி விழுந்ததால், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்; அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சோனாலி எதனால் தாக்கப்பட்டார் என்பது குறித்தும், பாலியல் பலாத்கார முயற்சியா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading