Local

ரஞ்சன் ராமநாயக்க விடுதலை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்று வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வுக்கு ஜனாதிபதியின் விஷேட மன்னிப்பு வழங்கப் பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 2021 ஜனவரியில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக இலங்கை நடிகரும் அரசியல்வாதியுமான அவர் நேற்று நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தான் கூறிய கருத்து உண்மைக்குப் புறம்பானது என்றும், கூறிய கருத்துகளை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் நிபந்தனை யுடன் கூடிய மன்னிப்புக்கான ஆவணத்தில் ஜனாதிபதி யின் ஒப்புதலுடன் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி யின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் எந்தவிதமான கருத்துகளையும் வெளியிடக் கூடாது என முன்னாள் எம்.பி.க்கு மன்னிப்பு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading