தினேஷ் ஷாப்டரின் படுகொலை விசாரணையின் தற்போதைய நிலை!

இலங்கையின் பிரபல வர்த்தகராக இருந்த ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் டிசம்பர் 15ஆம் திகதி மர்மமான முறையில் மரணமடைந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பொரளைப் பொலிஸாரும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 08 சிசிடிவி கமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்துள்ளதுடன், அந்தக் காட்சிகளின் பிரகாரம் திரு.தினேஷ் ஷாப்டர் தனது காரில் தனியாக பயணித்தமை தெரியவந்துள்ளது.
அத்துடன், அவர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி மற்றும் பிரியன் தோமஸின் கையடக்கத் தொலைபேசி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சட்ட வைத்திய அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியின் பரிசோதனை ஆரம்பமாகியுள்ளதுடன், அதில் அதிகளவு தரவுகள் இருப்பதால், பரீட்சைக்கு சிறிது காலம் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரையன் தோமஸின் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
