Local

திருமணத்திற்கு பின்னர், ஐந்து பிள்ளைகளை பெற்றெடுப்பது கட்டாயமாக்க வேண்டும்!

திருமணத்தின் பின்னர், ஐந்து பிள்ளைகள் பெற்றெடுப்பதை கட்டாயமாக்குமாறு தான் அரசாங்கத்திற்கு யோசனையொன்றை முன்வைப்பதாக முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவிக்கின்றார்.

இதன்படி ,தம்புள்ளை நகரில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் ,நாடு முழுவதும் அனைத்து விடயங்களுக்கும் வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதை அடுத்தே, தான் இந்த யோசனையை முன்வைப்பதாக அவர் கூறுகின்றார்.

”இளைய பிள்ளையை எண்ணெய் வரிசையில் நிறுத்த முடியும், இரண்டாவது பிள்ளை எரிவாயு வரிசையில் நிறுத்த முடியும், மற்றைய பிள்ளையை பால்மா வரிசையில் நிறுத்த முடியும், அடுத்த பிள்ளையை சீனி வரிசையில் நிறுத்த முடியும், கஞ்சியையாவது அருந்துவதற்காக அடுத்த பிள்ளையை அரிசி வரிசையில் நிறுத்த முடியும்” என பி.ஹரிசன் தெரிவிக்கின்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading